பந்தயமாடு

" கல்விப் பயணத்தில் உங்களை ஊக்கப்படுத்தும், உற்சாகமூட்டும், ஒரு நேர்த்தியான தளம் "

தலைப்புகள்

GATE EE 71 topics

.

🔢 GATE EE – 71 Subtopics List

(Main Subject-wise Subtopics)


1. Engineering Mathematics (8 Subtopics)

  1. Linear Algebra

  2. Calculus

  3. Vector Calculus

  4. Complex Variables

  5. Probability and Statistics

  6. Differential Equations

  7. Fourier Series

  8. Laplace Transform


2. Electric Circuits and Networks (6 Subtopics)

  1. Network elements (RLC)

  2. Kirchhoff’s laws

  3. Node and Mesh analysis

  4. Transient and Steady-State Analysis

  5. Theorems: Superposition, Thevenin, Norton, Maximum Power Transfer

  6. Resonance, Two-Port Networks, Network Graph Theory


3. Electromagnetic Fields (6 Subtopics)

  1. Coulomb’s Law, Electric Field Intensity

  2. Gauss’s Law, Electric Potential

  3. Conductors, Capacitance

  4. Biot–Savart’s Law, Ampere’s Law

  5. Magnetic Flux, Magnetic Field Intensity

  6. Maxwell’s Equations, Time-varying Fields


4. Signals and Systems (7 Subtopics)

  1. Continuous-time and Discrete-time Signals

  2. Transformations of Signals

  3. Continuous-time and Discrete-time Systems

  4. Convolution and Impulse Response

  5. Fourier Series and Fourier Transform

  6. Laplace Transform

  7. Z-transform


5. Electrical Machines (9 Subtopics)

  1. Magnetic circuits

  2. Single-phase Transformers

  3. Three-phase Transformers

  4. DC Machines (Motor/Generator)

  5. Induction Motors (Single-phase and Three-phase)

  6. Synchronous Machines

  7. Starting and Speed Control

  8. Losses and Efficiency

  9. Testing and Equivalent Circuits


6. Power Systems (9 Subtopics)

  1. Power Generation Concepts

  2. Transmission Line Parameters

  3. Per Unit System and Line Models

  4. Load Flow Analysis

  5. Voltage Control and Reactive Power

  6. Fault Analysis

  7. Power System Stability

  8. Protection and Relays

  9. Circuit Breakers


7. Control Systems (6 Subtopics)

  1. Transfer Function, Block Diagrams

  2. Time-domain Analysis

  3. Frequency-domain Analysis

  4. Stability: Routh-Hurwitz, Root Locus

  5. Bode Plots, Nyquist Criteria

  6. State-space Analysis


8. Electrical and Electronic Measurements (5 Subtopics)

  1. Measurement of Voltage, Current, Power, Energy

  2. PMMC and Moving Iron Instruments

  3. Instrument Transformers

  4. Digital Voltmeters, Digital Multimeters

  5. Oscilloscopes, Error Analysis


9. Analog and Digital Electronics (8 Subtopics)

  1. Diodes and Applications

  2. BJT, FET Characteristics

  3. Small Signal Analysis

  4. Biasing and Amplifier Circuits

  5. Operational Amplifiers and Applications

  6. Combinational Logic Circuits

  7. Sequential Logic Circuits

  8. Number Systems, ADC, DAC


10. Power Electronics (7 Subtopics)

  1. Power Semiconductor Devices (Diode, SCR, MOSFET, IGBT)

  2. Phase Controlled Rectifiers

  3. Choppers (DC-DC converters)

  4. Inverters (DC-AC converters)

  5. AC Voltage Controllers

  6. Cycloconverters

  7. Speed Control of Motors using Power Converters


ஆழ்ந்த படிப்பு, பழக்கங்கள், முறைகள்

 ஆழ்ந்த படிப்பு, பழக்கங்கள், முறைகள் 

studing girl icon

எழுதுதல் எவ்வளவு முக்கியம் ?        

 படிப்பதில் பல படிநிலைகள் இருக்கின்றன ,அதாவது ஆங்கிலத்தில் layer by layer என்பார்கள். ஒரே நாளில் முழு வீச்சில் ஒரு தலைப்பைக் கற்று அதில் தெளிவு பெற முடியாது சீரான இடைவெளியில் குறைந்தது 25 முறையாவது படித்து ஒப்பிட்டுத் திரும்ப திரும்ப நினைவு கூர்ந்து கொண்டே இருக்க வேண்டும் ( 2 அல்லது 3 நாட்கள் இடைவெளியில் ) இந்தச் செயலுக்கு நீங்கள் எழுதி வைக்கும் குறிப்புகள் உதவியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் படிப்பதை விட எழுதுதல் என்பது தன்னம்பிக்கையை அதிகரிக்கும், அதாவது உங்கள் கையெழுத்தில் உள்ள குறிப்புகளை பார்க்கும் போது அந்தப் பாடம் எளிதாகத் தோன்றும்.

ஒருதலைப்பைப் பற்றி
 படிக்கும் போது தொடர்ந்து அடுத்த அடுத்த நாட்களிலும் அதனைத் தொடரவேண்டிய சூழ்நிலை இருக்கும். இந்த மாதிரியான சமையங்களில் முந்தைய நாள் படித்தவற்றை முழுவதுமாக நினைவு கூற முடியாது எனவே படிக்கும் போதே குறிப்பெடுப்பது இதற்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். எழுதி வைக்கும் குறிப்புகளைத் திறம்பட கையாள்வது ஒரு கலை அதனை ஒருமுறைக் கற்று தெளிந்தால் பின்னர் வாழ்நாள் முழுவது மறக்க மாட்டீர்கள்.

ஒரு தலைப்பில் ஆழ்ந்த அறிவைப் பெறுவதற்கு எழுதுதல் அவசியம். ஒரு விஷயத்தை நினைவு கூர்ந்து எழுதுவது என்பது அந்த விஷயத்தை மற்றொருவருக்கு விளக்கிச் சொல்வதற்க்கு சமம். இந்தச் சிறப்பியல்பின் காரணமாகத் தான் இன்றளவிலும் கல்விநிறுவனங்களில் தேர்வுகள் நடைமுறையில் உள்ளது. இது என்றுமே மாறாது. தேர்வு என்றாலே அடுத்து நம் நினைவுக்கு வருவது எழுதுவதைப் பற்றி தான் , அந்த அளவுக்கு எழுதுதல் முக்கியம். இது objective type exam களுக்கும் பொருந்தும் , GATE தேர்விலும் கூட எழுதுவதற்கு scribble pad ஒன்றைக் கொடுப்பார்கள்.

எழுதுவதைப் பழக்கிக்கொள்ள
 நிறைய நோட்டு புத்தகங்கள் தேவைப்படும் விலை அதிகம் ஆகும் எனக் கவலை வேண்டாம்.

அதற்கும் ஒரு வழி இருக்கிறது , stationary மொத்த விலைக்கடையில் 500 பக்கங்கள் கொண்ட A3 size paper bundle ஒன்றை வாங்கிக்கொள்ளுங்கள் விலை ரூ 420 ஆகும் , பின்னர் அதை நூறு நூறு பக்கங்களாகப் பிரித்து A4 அளவில் போடுவது போல பக்கவாட்டில் spiral binding செய்து கொள்ளுங்கள். spiral ஒன்றுக்கு முப்பது ரூபாய் ஆகும். மொத்தம் 570 ரூபாயில் ஒரு வருடத்திரக்குத் தேவையான , தரமான 500 A3 பக்கங்கள் ( 1000  A4 பக்கங்கலுக்கு சமம் ) கொண்ட குறிப்பேடுகள் தயாராகிவிடும்.பேனா மொத்தமாக வாங்கினால் அடக்கவிலை 3 ரூபாய் வரும். ஒட்டுமொத்தமாக 750 ரூபாயில் நீங்கள் தங்குதடையின்றி எழுத முடியும்.

உடல்நலத்தில் கவனம்


ஆழ்ந்து படிக்கும் பொது உடலில் பசி தன்மை அதிகரிக்கும் இருந்தாலும் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். உடலுக்கு மற்றும் மனதுக்குச் சந்தோஷம் தரக்கூடிய ஒன்று கல்வியாக மட்டும் தான் இருக்க வேண்டும்.

உதாரணத்திரக்கு நீங்கள் IISC மற்றும் IIT போன்ற கல்விநிறுவனங்களின் பட்டமளிப்பு விழாவை யூட்டூப் வலைதளத்தில் பார்க்கலாம் அதில் பட்டம் பெரும் மாணவர்கள் பெரும்பாலும் உடல் மெலிந்து காணப்படுவார்கள்.அதற்குக் காரணம் கேண்டீன் உணவு சரியில்லை என்பதாக அர்த்தம் இல்லை , அவர்களுக்கு உணவை விட கல்வியின் மீது தான் அதிக நாட்டம் கல்வியைத்தான் அவர்கள் ருசிக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம்.

ஆழ்ந்து படிக்கும் பயிற்சி என்பது ஒரு தியான நிலைப் போன்றது , இதனால் நீங்கள் தனியாகத் தியானப்பயிற்சி பெற வேண்டியதில்லை. இதனால் உங்கள் நடத்தையில் நிறைய நல்லவிதமான மாற்றங்கள் ஏற்படும், பொறுமை, நிதானம் அதிகரிக்கும்.

பகல் பொழுதுகளில் படிப்பதை வாடிக்கையாகக் கொள்ளவேண்டும். இரவு நேர உறக்கத்தைத் தவிர்ப்பது ஒருதுறையில் ஆழ்ந்த அறிவைப் பெற விரும்புபவர்களுக்கு நல்லதல்ல. அதைபோல நேர உறக்கமும் அன்றாட திட்டங்களைப் பாதிக்கும். பகல் நேரத்தில் உறக்கம் வராத அளவுக்கு இரவில் உறங்க வேண்டும்.

பகலில் இயற்கையான வெளிச்சத்தில் அமர்ந்து படித்தால் நல்லது ,தனிமை அவசியம், நமக்குப் பரிட்சியமானவர்கள் அருகில் இருத்தல் கூடாது.அப்படி இருந்தால் அவர்களால் கவனச் சிதறல் ஏற்படும். முன் பின் தெரியாதவர்களால் பிரச்சனையில்லை.

ஒரே இடத்தில் பல மணிநேரம் அமர்ந்து இருத்தல் அவசியம் ,அப்படி அமர்ந்தவாரே நேரத்தைக் கழிப்பது உங்களுக்கு நிச்சயம் சிரமமாக இருக்கும். அதனைச் சரிசெய்ய Posture Corrector belt ஒன்றை வாங்கி உபயோகியுங்கள்.

dead hanging trainingPosture Corrector

முடிந்தால் 2 மணிநேரத்திற்கு ஒருமுறை 20 வினாடிகள் dead hangs செய்து பழகுங்கள். இதனால் முதுகுவலி மற்றும் உங்கள் posture இல் ஏதும் மாற்றங்கள் நிகழாமல் தடுக்கலாம்.


படிக்கும் பொது மேசையின் உயரம் மிகவும் தாழ்வாக இருந்தால் தலையைக் கவிழ்த்துக்கொண்டு வெகுநேரம் செலவிடமுடியாமல் போகும் எனவே eye sight 45 டிகிரி க்கும் கீழ் நோக்கி போகாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

எப்படி ? படிக்க வேண்டும் 

ஒரு தலைப்பைப் பற்றி படிக்கத் தொடங்கும் முன் அதனைப் பற்றிய அனைத்து keyword களையும் சேகரிக்க வேண்டும். பின்னர் அதனை வரிசைபடுத்தி ஒவ்வொன்றாகப் படித்து தெளிவு பெறவேண்டும். மேலும் ஒன்றை ஒன்று எவ்வாறு சம்பந்த படுத்துகிறது என்று பார்த்து வரைபடம் வடிவிலான குறிப்பு எடுக்க வேண்டும் அதற்கு மனவரைபடம் என்று இன்னொரு பெயரும் இருக்கிறது.

ஒரு chart அட்டை ஒன்றை வாங்கி அந்தப் படத்தில் உள்ள மொத்த keyword களையும் எவ்வாறு ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது என்று வரைந்து வைத்துக்கொள்ளுங்கள், அந்த chart ஐ வைத்து rivision செய்ய எளிதாக இருக்கும். revision ஐ பொறுத்தவரையில் அச்சு வடிவிலான புத்தகங்களைவிட கையெழுத்து வடிவிலான குறிப்புகள் தான் அதிகம் பலன் தரும்.

படித்ததை விட அதை உபயோகத்தில் வைப்பது மிக முக்கியம் அதன் முதல் செயல்முறை நினைவு கூர்ந்துகொண்டே இருப்பது , குறிப்புகளை பார்த்துக்கொண்டே revision செய்வதை விட எதையும் பார்க்காமல் நினைவு கூர்ந்துக் கொள்ள பழக்கிக்கொள்ளுங்கள்

மேலும் ஒரு பாடத்தைப் படிக்கும் போது அதனை படிப்படியாகப் புரிந்து கொள்வது சிறந்தது முதலில் ஒரு தலைப்பைப் படிக்கும் போது அதற்குத் தேவையான அடிப்படைகளில் தெளிவாக இருக்க வேண்டும். அந்தத் தலைப்பை உள்வாங்கிய பின்னர் இரு தலைப்புகள் இடையே உள்ள தொடர்பு மற்றும் கலவையான, சிக்கலான தலைப்புகள் எனப் படிப்படியாக முன்னேறி செல்லவேண்டும். இப்படிச் செய்யும் போது எளிதாக உணருவீர்கள். Concepts-ஐ முதலில் உங்கள் மொழியில் புரிந்து கொள்ளுங்கள்.
பிறகு standard English terminology-யை slowly absorb பண்ணலாம்.
உங்கள் note-ஐ bilingual-ஆக வைத்தால் (tamil  + english )  தடுமாறமாட்டீர்கள்.

படிப்பது அவ்வளவு கடினமா ?   

படிக்கும் பயிற்சி பொதுவான பார்வையில் கடினமானதாக தோன்றும்  இதற்குப் பல காரணங்கள் உள்ளன அதில் சிலவற்றைப் பார்ப்போம் ,எல்லா மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான IQ ஒரே வயதில் வராது இது அறிவியல் பூர்வமான உண்மை , அதைக் கண்கூடாக நீங்களே பார்க்கலாம்.

For reference,: Intelligence_quotient

ஒரு சிலவற்றை உங்களுக்குப் புரிந்து கொள்ளும் வகையில் இல்லையென்றால் அதை விட்டுவிட்டு புரியும் மற்ற பாடங்களில் கவனம் செலுத்துவது நல்லது பின்னர் அடுத்த ஆண்டோ அல்லது ஒரு சில ஆண்டுகள் கழித்தோ உங்களால் அதைப் புரிந்துகொள்ள முடியும். இந்தியாவைப் பொறுத்தவரையில் இந்த IQ ஏற்றத்தாழ்வுகள் அதிகம் இதனால் தான் தேர்ச்சி மதிப்பெண்ணாக பள்ளிகளில் நூற்றுக்கு 35 % வும் கல்லூரி களில் 45% யும் வைத்து உள்ளனர். ஜப்பானிலும் ,அமெரிக்காவிலும் தேர்ச்சி அடைய பெறவேண்டிய மதிபெண் 60 %,


for  reference  Academic_grading_in_Japan , Academic_grading_in_america

இதனால் IQ குறைவாக உள்ளவர்கள் அப்படியே இருந்துவிடுவார்கள் என்று அர்த்தம் கிடையாது , ஒரே வயதுடைய இரு மாணவர்கள் வெவ்வேறு வயதில் அவர்களுக்கான IQ வின் உச்சத்தை அடைகிறார்கள் என்பது தான் நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும். முறையாகப் பயிற்சி பெற்றால் அதனை எளிதாக அடைந்துவிடலாம் ஒருவர் 15 வயதில் செய்ய முடியாததை 20 வயதிலோ அல்லது 30 வயதிலோ எளிதாகச் செய்யலாம். இதற்கு இந்திய கல்வி அமைப்பு அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கிறது. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் நம் நாட்டில் கல்வி பயில எந்தப் பிரிவினருக்கும் வயது வரம்பு கிடையாது. 

மேலும் இந்திய கல்வித்துறைத் தொடர்பான தகவல்களுக்கு லிங்க் கீழே கொடுக்கப் பட்டுள்ளது . தமிழில் மொழிபெயர்த்துப் படித்துக்கொள்ளவும்.

india flag
for reference national education policy of india  , https://www.education.gov.in/ 

sitemap: https://www.education.gov.in/sitemap

மேலும் அமெரிக்கக் கல்வி துறைத் தொடர்பான தகவல்களுக்கு

usa flag
for reference  U.S. Department of Education 


-----------------------------------------------------------------------------------------------------

translator icon  கொடுக்கபட்டுள்ள இணையதப் பக்கங்களை கூகிள் transletor extension உதவியுடன் முழுமையாகத் தமிழில் மொழிபெயர்த்து புரிந்துகொள்ளுங்கள்.
-----------------------------------------------------------------------------------------------------

கல்வி மற்றும் அறிவியல் தொழில் நுட்பங்களைப் பொறுத்தவரையில் உலக நாடுகள் அனைத்தும் மனிதச் சமூகம் அதில் மென்மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்கிற ஒற்றைப் பாதையில் தான் பயணிக்கிறது.
அதற்க்கு மிகச்சிறந்த உதாரம் நல்ல திறமையான மானவர்களுக்குப் பல முன்னேறிய நாடுகள் நிதி உதவியுடன் கூடிய கல்வியை அளிப்பது மட்டுமல்லாமல் , ஒருங்கிணைந்த கல்வி நிறுவனங்களையும் நடத்துகின்றன. அதில் மானவர்களுக்கு dual degree (mtech + btech) பட்டங்களும் அளிக்கப்படுகின்றன.
IGP- indo german partenership என்கிற பெயரில் இந்தியாவும் ஜெர்மனியும் சேர்ந்து
கோடைக்கால மற்றும் குளிர்கால கல்வி வகுப்புகள் , கூட்டு ஆராய்ச்சி மற்றும் மாணவர்கள் பரிமாற்றம் ஆகியவற்றில் ஈடுபடுகின்றன. இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஐஐடி களிலும் இந்த நிகழ்வானது நடக்கிறது 

இந்தியா மாணவர்களுக்கு ஜப்பான், இஸ்ரேல் ,அமெரிக்கா , இங்கிலாந்து , தென்கொரியா, ஜெர்மனி , கனடா , ஆஸ்திரேலியா , பிரான்ஸ் போன்ற நாடுகளில் scholership உடன் கல்வி பயில கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. இதற்கான பிரத்தியேகத் தேர்வுகள் அந்தந்த கல்வி நிறுவனங்களால்  நடத்தப்படும்.

கல்வியில் கடின பயிற்சி பெற்று எதிர்காலத்தில் வளமாக வாழவு எதை நோக்கி நீங்கள் பயணிக்க வேண்டும் என்பதை முன்னதாகவே தீர்மானிக்கவும் இதையெல்லாம் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.


 


IEEE கட்டுரையின் வெளியீட்டின் அவசியம்


IEEE கட்டுரையின் வெளியீட்டின் அவசியம் 

ieee logo

அவசியம் என்ன?

இதற்குச் சரியான பதில் ஒரு வார்த்தைத் தான் அங்கீகாரம். IEEE என்பது ஒரு அமெரிக்க நிறுவனம் இதன் மூலமாக உலகெங்கும் வியாபித்து இருக்கும் துறைசார் அறிஞர்களிடம் உங்கள் படைப்பு மற்றும் திறனுக்கான ஒப்புதலைப் பெருதலே இந்தக் கட்டுரை வெளியீடு நிகழ்வு, IEEE ஒருங்கிணைக்கும் வருங்கால நிகழ்வுகளை கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி காணலாம்.


யார் ? சமர்பிக்கலாம்

உயற்கல்வியை முடித்துப் பட்டப்படிப்பு படித்துகொண்டிருக்கும் அனைத்து மாணவர்களும் இந்தக் கட்டுரையை தயார்ச் செய்து சமர்பிக்க IEEE அனுமதி அளிக்கிறது . மேலும் பட்டம் முடித்த தற்போது பணியில் இருப்பவரும் சமர்பிக்கலாம்


சமர்பிக்கும் முறை

கட்டுரை முழுவதுமாகத் தொழில்நுட்பம் சார்ந்து மட்டுமே இருக்க வேண்டும்.உதாரணத்திற்கு IEEE journals வெளியீடு ஒன்றை தயார்ச் செய்வதாக வைத்துக்கொள்வோம் . முதலில் ஏற்கனவே சமர்பிக்கப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்டுரைகளை மேற்கோள் காட்டி அதைவிட மேம்பட்ட கட்டுரை ஒன்றை அதற்கான டெம்ப்ளேட் வடிவில் தயார்ச் செய்யவேண்டும்.

template selector screen

உங்களுக்குத் தேவையான டெம்ப்ளேடை IEEE இணையதளம்  தில் இருக்கும் Template selector உதவியுடன் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.பின்னர் அந்தக் கட்டுரையை துறைச் சார்ந்த பேராசியர்களிடம் சமற்பித்து ஆய்வுக்கு உட்படுத்தி அதில் வரும் தொழில்நுட்ப பிழைகளைச் சரி செய்ய வேண்டும். (நிராகரிக்கவும் வாய்ப்புள்ளது.) பின்னர்

பப்ளிஷர் யார் என்பதைத் தேர்வு செய்யவேண்டும், பப்ளிஷர் உங்கள் கட்டுரையை அடிப்படை எழுத்துபிழைக்கள் மற்றும் இலக்கண பிழைகளைச் சரிபார்த்து அதனைத் துறைசார்ந்த அறிஞர்களிடம் சமார்பிப்பார். அதன் நம்பகத்தன்மையைப் பரிசோதித்த பின்னர் அதனை IEEE தளத்தில் வெளியிட்டு துறைச் சார்ந்த வல்லுநர்கள், கல்வி நிறுவனங்கள் அனைவரும் பார்க்கும் படி செய்வார் , மேலும் நீங்கள் வெளியிட்ட இந்தக் கட்டுரைக்காக உங்களுக்கு ஒரு பிரத்தியேக (digital object identifier) ID ஒன்று கொடுக்கப்படும்.

வெளியிடப்பட்ட அந்தக் கட்டுரையை பார்த்த யார் வேண்டுமானாலும் உங்கள் கட்டுரையை அடிப்படையாக வைத்து அதில் சில மேம்படுகளைச் செய்து வேறு ஒரு கட்டுரையை சமர்பிக்க முடியும். அப்படிச் செய்யப்படும் கட்டுரைகளின் copyright நிர்வகிப்பது மற்றும் மறுபதிப்பு செய்வதைத் தடுப்பது பப்ளிஷர்களின் பொருப்பு.


இதே போல் IEEE conference வெளியீட்டிற்கு முதல் முறை வெளியிடப்படும் கட்டுரைக் களுக்கு மட்டுமே அனுமதி உண்டு , ஏற்கனவே வெளியிடப்பட்ட கட்டுரைகளை மேம்பாடுகள் செய்ய முடியாது.
இந்தச் செயல்முறைக்கு தளமாக இருப்பது IEEE எனும் நிறுவனம்.

செலவு எவ்வளவு ?

conference வெளியீட்டிற்கு கட்டுரைச் சமர்பிக்க இலவசம் , ஏற்றுக்கொள்ளபட்ட பிறகு வெளியிட ரூ 15000 ( ஏறத்தாழ) வரை ஆகும்.

journals வெளியீட்டிற்கும் கட்டுரைச் சமர்பிக்க இலவசம் , வெளியீடுவாதற்க்கு ,

IEEE (closed access ) பப்ளிஷ் செய்ய இலவசம் ,கட்டுரை வேண்டியவர்கள் பணம் செலுத்தி படிப்பார்கள். மெம்பர்ஷிப் இருந்தாலும் பணம் செலுத்தி படிக்க வேண்டும்.

IEEE (open access ) பப்ளிஷ் செய்ய - 1850 டாலர் ஆகும் - மெம்பர்ஷிப் உள்ளவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்

ஆகும் காலம் எவ்வளவு ?

இதனை இரண்டு விதமாக எடுத்துக்கொள்ளாம் conference மற்றும் journals கட்டுரையைத் தொடங்கி , ஒப்புதல் பெற்று ,திருத்தம் செய்து மீண்டும் conference களில் சமர்பிக்கக் குறைந்தது ஆறுமாத காலம் ஆகும். இதுவே journals என்றால் சமர்பிக்கக் குறைந்தது ஒருவருட காலம் ஆகும்.

குறிப்பு : 6 மற்றும் 12 மாதங்கள் என்பது குறைந்த பட்சக் கால அளவு

அதிகமாகக் கட்டுரை வெளியிடுவது யார் ?

உலகத்தில் அதிகமாக IEEE கட்டுரைகளை வெளியிடுவது அமெரிக்கா இரண்டாவது இடத்தில் வேகமாக வளர்ந்துவரும் சீனா இருக்கிறது பின்னர் ஜப்பான் , தென்கொரியா, இந்தியா நாடுகள் அடுத்தடுத்து இருக்கிறது.

membership அவசியமா ?

இந்தத் தளதில் வெளியாகும் பத்திரிக்கைகள் உங்களுக்கு வேண்டும் என்றால் mebership அவசியம் , மேலும் இந்தக் கட்டுரைகளை படித்து புரிந்து கொள்ளும் அளவிற்கு உங்களுக்கு உங்கள் துறையில் அனுபவம் இருக்கவேண்டும். கட்டுரை வெளியிடும் திட்டம் இருப்பவர்கள்மற்றும் துறையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள் தாராளமாக மெம்பர்ஷிப் வாங்கிக்கொள்ளலாம். கட்டுரை வெளியிடும் நபர்களுக்கு மெம்பர்ஷிப் மூலம் சலுகைகள் உண்டு மாணவர்களுக்கு வருடத்திற்கு 14.25 டாலர் ஆகும். இதனை இந்தியா ரூபாயில் செலுத்தி வாங்க முடியாது , கிரிடிட் கார்டு (Visa,mastercard) மூலம் மட்டுமே வாங்க முடியும் மேலும் தகவல்களுக்கு  click  link 


IEEE யின் நோக்கம்

IEEE அமைப்பின் நோக்கம் அவர்களது நோக்கம் துறைசார்ந்த அறிவை மேம்படுத்துவதும், மேலும் அதனை அனைவருக்கும் கிடைக்கப்பெற செய்வதும்.


More links

"Graphic scientific calculator" Mobile App.

ஆழ்ந்த படிப்பு, பழக்கங்கள், முறைகள்  





"Graphic scientific calculator" Mobile App.

calculator image

"Graphic scientific calculator"  Mobile App.


நான் இந்த அப்ளிகேஷன் ஐ கடந்த 2022 ஆண்டு முதல் உபயோகித்து வருகிறேன், மிகவும் சிறப்பான மொபைல் ஆப் மேலும் இது google playstore இல் இலவசமாகவும் கிடைக்கிறது . இதனை முதல் முறைப் பயன்படுத்த இன்டர்நெட் இணைப்பு அவசியம். தேவையான தகவல்கள் ஒருமுறை டவுன் லோட் ஆகிவிட்டால் பின்னர் இன்டர்நெட் இணைப்பு இல்லாமலும் உபயோகித்துக் கொள்ள முடியும்.


calculator app  image in playstore

டவுன்லோட் செய்த பின்னர் முதல் முறை இந்த application ஐ தொடங்கும் பொது கீழே குறிப்பித்துள்ளவாறு choose your calculator எனத் தொடங்கும்,
அதில் உங்கள் விருப்பமான கால்குலேட்டரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

calculator imagecalculator image
மேலும்
991 EX- என்பது expert level
991 ES - என்பது Standard level
மற்றும் basic calculator

இந்த App மூலம் பெரிதாகப் பயனடைய விரும்பினால் இதில் உள்ள 2 D graph , 3D graph மற்றும் Formulas ஆகியவற்றைத் தினசரி உபயோகித்துப் பழகுங்கள், உங்கள் கல்வி பயணத்தில் நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் இந்த App உங்களுக்கு உபயோகமாக இருக்கும். கணிதத்தை நன்றாகப் புரிந்துகொள்வதற்க்கு இது பெரிதும் உதவும்.

calculator imagecalculator image


இதில் உள்ள formula பக்கங்கள் இதன் கூடுதல் சிறப்பு, மேலும் அனைத்துக் கணிதம் , இயற்பியல் , வேதியல் சூத்திரங்களும் வெவ்வேறு தலைப்புகளின் கீழ் வரிசைப் படுத்தப்பட்டு இருக்கும் தினமும் revision செய்யப் பயன்படுத்தலாம். அதில் சில மாதிரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


calculator imagecalculator image


calculator image
படிக்கும் பொழுது ஏற்படும்  algebric  euqation  மற்றும் trigonometry கணக்கீடுகள் தொடர்பான சந்தேகங்களு இந்த App ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.



 

பிரபலமான இடுகைகள்