How to complete the signal and system syllabus for GATE exam?
இந்தப் பாடத்தை
1. Basics & Types
2. Fourier series
3. Fourier transform
4. Laplace transform
5. Z transform
6. LTI system
7. Sampling theorem
1. மதிப்பெண் (marks )
2. நேர கணக்கீடு (time consumption )
3. பயிற்சி மற்றும் தரவுகளுக்கான லிங்க்ஸ் (links for Notes )
4. முக்கிய வார்த்தைகள்(keywords) மற்றும் கேள்வி முறைகள்(question pattern)
ஆகியவை முழு விபரங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
SIGNAL AND SYSTEM GATE syllabus,
Representation of continuous and discrete-time signals
shifting and scaling properties
linear time-invariant and causal systems
Fourier series representation of continuous and discrete-time periodic signals
sampling theorem
Applications of the Fourier Transform for continuous and discrete-time signals
Laplace Transform and Z transform.
R.M.S. value, average value calculation for any general periodic waveform.
மேலே கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் அனைத்தும் பார்ப்பதற்க்கு எளிதாகவும் , புரியும் வகையிலும் இருக்கும். ஆனால் இதனைத் தெளிவாக புரிந்து படிக்கத் தொடங்கும் பொது உங்களுக்கு ஒரு விஷயம் தெரியவரும் அது என்னவென்றால்
"இதற்குப் பேசாமல் முழு புத்தகத்தையும் படிக்கச் சொல்லியிருக்கலாம்" என்பதுதான்.
ஆம் கொடுக்கப்பட்டுள்ள அனைத்துத் தலைப்புகளுமே வலைப்பின்னல் போன்ற அமைப்பில் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி இருக்கும்.
இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம்.
பின்னர் எதற்கு SYLLABUS ?
நான் இது பற்றி ஒரு கல்லூரி கணிதப் பேராசிரியாரிடம் கேட்டபோது அதற்க்கு அவர் கூறியது.
" syllabus என்பது அந்தப் பாடத்தின் ஆழத்தைக் குறிக்கிறது அது மாணவர்களை விட தேர்வுக்கு வினாத்தாள் தயார்ச் செய்பவருக்கு தான் மிகவும் முக்கியம், நீ உன்னால் முடிந்தவரை அந்தப் பாடத்தை முழுமையாகப் படிக்க முயற்சி செய் "
அவர்க் கூறியதில் இருந்து நான் புரிந்துகொண்டது, SYLLABUS என்பது ஒரு துறையில் அறிமுகமாகி நீச்சல் பழக்குவதுபோல அந்தத் துறையை ஆரம்ப நிலையில் கற்கக் கூடிய மாணவர்களுக்கு " இதற்கு மேல் செல்ல வேண்டாம் " என்றும், அதிக அனுபவமும் , துறைச் சார்ந்த அறிவும் பெற்று ஆழத்தில் நீச்சலிடும் ஆசிரியர்களுக்கு இதைத் தாண்டி அந்த மாணவனை வர வற்புறுத்த வேண்டாம்" என்றும் எச்சரிக்கும் மிதவையாகச் செயல்படுகிறது.
ஆண்டு வாரியாக மதிப்பெண் விவரப்பட்டியல்
பகுதி-1 : BASICS AND TYPES
🔍 observations
இந்த பகுதியை பொறுத்தவரை கீழே குறிப்பிடப்பட்டுள்ள 53 முக்கிய வார்த்தைகளின் அம்சங்களை உள்ளடக்கிய கலவையாக கேள்விகள் கேட்கப்படுவதற்க்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது.
கடந்த 2008 முதல் 2023 வரை 15 ஆண்டுகளில் 9 ஆண்டுகள் இந்த பகுதியில் இருந்து கேள்விகள் கேட்டக்கப்பட்டுள்ளது, அதில்
2 மதிப்பெண்களுக்கான வினாக்கள் 6 முறையும்
1 மதிப்பெண்களுக்கான வினாக்கள் 3 முறையும் கேட்கப்பட்டுள்ளது.
📌 Key words
continuous time signals
discrete-time signals
continuous amplitude signals
discrete amplitude signals
step signal
impulse signal
ramp signal
exponential signal
parabolic signals
sinusoidal signal
co-sinusoidal signal
deterministic signal
random signal
real signal
complex signal
odd or anti-symmetric signals
even or symmetric signals
periodic signals
non-periodic signals
energy signals
power signals
Neither energy nor power signal
amplitude shifting
amplitude scaling
time shifting
time scaling
time reversal
amplitude reversal
causal signals
non-causal signals
anti-causal signals
one dimensional signal
multiple-dimensional signal
sampler
quantizer
triangular function
rectangular function
differentiation of signal
integration of signal
driac delta function
time domain
frequency domain
orthogonal signal
static system
dynamic system
linear system
nonlinear system
time variant system
Time-invariant system
stable system
unstable system
invertible system
non-invertible system
📚 கேள்விகள் தொடுக்கப்படும் முறை
💡 Example
1. ஒரு வினாவில் TIME SHIFTING, TIME SCALING, RAMP SIGNAL, TIME DOMAIN SIGNAL ஆகிய நான்கு கருத்தையும் உள்ளடக்கிய வாறு கேட்கலாம். நான்கு கருதுகோளும் உங்களுக்கு பிழையின்றி உபயோகப்படுத்த தெரிந்தால் தான் ஒரு மதிப்பெண் பெற முடியும்.
2. Avg அல்லது RMS value கொடுத்து அந்த சிக்னலை odd அல்லது even என அடையாளபடுத்தி, பின்னர் time அல்லது amplitude இல் shifting அல்லது scaling செய்து கிடைக்கும் சிக்னலின் period அல்லது amplitude கேட்கலாம்.
3. step signal சமன்பாட்டின் வடிவிலான ramp signal ஒன்றை கொடுத்து அதன் energy அல்லது power கணக்கிட சொல்லலாம்.
4. ஒரு சிக்னல் வடிவத்தை கொடுத்து அதன் சமன்பாட்டை கேட்கலாம்.
5. சிக்னல் ஒன்றை கொடுத்து அதனை integration அல்லது differentiation செய்ய சொல்லலாம்.
6. DT (discrete time signal) அல்லது CT (continuous time signal) இதில் ஒன்றை கொடுத்து அதனை shifting, scaling, reversal செய்ய சொல்லி கிடைக்கும் வடிவத்தின் period மற்றும் amplitude கேட்கலாம்.
7. DT சிக்னல் ஒன்றை கொடுத்து அதன் period (N) ஐ கண்டுபிடிக்க சொல்லலாம். (இதற்கு சமன்பாட்டில் எல்லா சிக்னல் களுக்கும் தனித்தனியே N ஐ கண்டுபிடித்து, இறுதியாக LCM எடுக்க வேண்டும்.)
8. ஒரு WAVE FORM கொடுத்து அதான் avg மற்றும் rms மதிப்புகளை கேட்கலாம்.
9. CT சிக்னல் ஒன்றை கொடுத்து அதன் frequency ஐ கண்டுபிடிக்க சொல்லலாம். (இதற்கு சமன்பாட்டில் எல்லா சிக்னல் களுக்கும் தனித்தனியே T ஐ கண்டுபிடித்து, இறுதியாக LCM எடுக்க வேண்டும்.)
10. CT சிக்னல் ஒன்றை கொடுத்து அதன் angular frequency (ω) மற்றும் period கணக்கிட சொல்லலாம்.
பகுதி-2 : FOURIER SERIES
பகுதி-3 : FOURIER TRANSFORM
பகுதி-4 : LAPLACE TRANSFORM
பகுதி-5 : Z -TRANSFORM
பகுதி-6: LTI SYSTEM
பகுதி-7 : SAMPLING THEOREM
-------------------------------------------------------------
தினசரி பயிற்சி குறிப்புகள்
பயிற்சி-1
NESO ACADEMY யின் இந்த PLAYLIST இந்த பாடத்திற்க்கு ஒரு சிறந்த அறிமுகமாக இருக்கும் மேலும் சிக்னல் களின் அடிப்படையை புரிந்து கொள்ள மிகச்சிறந்த தளம்.
313 காணொளிகள் * 10 நிமிடம் (சராசரி) = 3130 நிமிடங்கள்
3130 நிமிடம் /60 நிமிடம் =52.166 மணி நேரம்
52.16 மணி /1.5x வேகம் = 34.66 மணிநேரம்
நாளொன்றுக்கு 7 மணிநேரம் செலவிட்டால் ,
34.66 மணி / 7 ( நாள் / மணி ) = 4.95 நாட்கள் ~ 5 நாட்கள்
எடுத்துக்கொள்ளப்பட்ட நேரம் : 5 நாட்கள்
பயிற்சி-2
nptelhrd எனும் யுட்யூப் தளத்தில் உள்ள Prof. K.S. Venktesh, Department of Electrical Engineering , IIT Kanpur அவர்களின் Electrical-Signals and System PLAYLIST.
45 காணொளிகள் * 1 மணிநேரம் = 45 மணிநேரம்
45 மணி * 1.5 x வேகம் = 30 மணிநேரம்
30மணி / 7 மணி (நாளொன்றுக்கு ) = 4.28 நாட்கள் ~ 5 நாட்கள்
Click for link
பயிற்சி-3
STUDIO IIT BOMBAY யுட்யூப் தளத்தில் உள்ள PROFEESOR VIKRAM M.GADRE அவர்களின் EE210.1x Signals and Systems PLAYLIST
PART-1
காணொளிகள் 108 * 10 நிமிடம் ( சராசரி ) = 1080 நிமிடம்
1080 நிமிடம் / 60 = 18 மணிநேரம்
18 மணி * 1.5x வேகம் = 12 மணி நேரம்.
Click for link
PART-2
காணொளிகள் 71 * 12 நிமிடம் ( சராசரி) = 852 நிமிடம்
852 நிமிடம் / 60 = 14.2 மணிநேரம்
14.2 மணி * 1.5 x வேகம் = 9.46 மணிநேரம்
Click for link
மொத்தமாக 12+9.46 = 21.46~ 22 மணிநேரம்
22 மணி / 7 மணி ( நாளொன்றுக்கு ) = 3.14 நாட்கள்
கொஞ்சம் மெனக்கிட்டால் 3 நாட்களில் முடித்துவிடலாம்.
******************* Btech EEE துறையை சேர்ந்த மாணவர்களுக்கு பயிற்சி-1, பயிற்சி-2 மற்றும் பயிற்சி-4 போதுமானது *************************
----------------------------------------------------------------------------------------------------------------------
கவனிக்கவேண்டியவை
1. மேலே குறிப்பிட்டுள்ள பாடத்தைக் கவனிக்கும் போது காணொளியின் வேகத்தை 1.5 மடங்கு வேகத்தில் இயக்கவும்.
2. ஒருமணி நேரத்திற்க்கு ஒரு முறை 20 நிமிட இடைவெளியை நிச்சயமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
3. படித்த பாடங்களை மறக்க விடாமல் தினமும் நினைவு கூர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
பயிற்சி-4
ONLINE TEST SERIES பொறுத்தவரை ஆறுமாததிற்க்கு முன்பாகவே தொடங்கிவிடுவது நல்லம், முன்னதாகத் தொடங்குவதால் முழு 3 மணி நேர தேர்வாகப் பயிற்சி செய்ய முடியாது , ஆகவே பகுதி பகுதியாக 45 நிமிட TOPIC WISE TEST ஆக பயிற்சி பெறலாம்.ஆன்லைனில் TEST SERIES வாங்குவதற்க்கு நிறைய இணைய தளங்கள் உள்ளன , அதில் எது சிறந்தது என்கிற பேச்சுக்கே இடமில்லை எல்லாமே ஒரே மாதிரியானவைத் தான் , அவைகளின் பிராண்ட் மதிப்பைப் பொருத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.ஏனென்றால் நான் MADE EASY, TEXTBOOK மற்றும் PHYSIC WALLAH ஆகிய மூன்று தளங்களிலுமே வாங்கி உபயோகித்துள்ளேன் மூன்றுமே ஒரே மாதிரியான உணர்வைத் தான் கொடுத்தது,அன்றைய காலகட்டத்தில் நிறைய பள்ளி மாணவர்களின் BYJUS மீதான குற்றச்சாட்டு என்னை அந்த நிறுவனத்தின் மீது அவநம்பிக்கைக் கொள்ள செய்துவிட்டது,அதனால் தவிர்த்து விட்டேன்.TEST SERIES ஒன்றின் விலை : ரூ 2000 ( ஏறத்தாழ )எடுத்துக்கொள்ளப்பட்ட நேரம் : தினமும் 1 மணிநேரம்
`புத்தகங்கள்
1. P. Ramesh Babu, ‘Signals and Systems’, 4th Edition, Scitech Publishers, 2010
505 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம் அனைத்துத் தலைப்புகளையும் உள்ளடக்கியது. இதில் எல்லாத் தலைப்புகளும் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டிருந்தாலும் , PROBLEMS என்பது பெயரளவில் மட்டுமே இடம்பெறும் ஆகவே இந்தப் புத்தகத்தை NESO ACADEMY PLAY LIST க்கு பிறகு படிப்பது உகந்தது.மேலும் இந்தப் புத்தகம் ஆன்லைனில் இலவசமாகக் கிடைக்கிறது,
எடுத்துக்கொண்ட நேரம் : தினசரி 20 நிமிடம்
2. Sathyabama Institute of Science and Technology யின்
"SCHOOL OF MECHANICAL DEPARTMENT OF MECHATRONICS" வெளியிட்டுள்ள PDF தரவுகள் .
Click for link
92 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தை NESO ACADEMY PLAY LIST ஓடிக்கொண்டிருக்கும் போதே அருகில் வைத்து படித்தால் சுலபமாக இருக்கும். இதற்குத் தனியாக நேரம் ஒதுக்கதேவையில்லை
எடுத்துக்கொண்ட நேரம் : 5 நாட்கள்
முக்கிய குறிப்பு
எல்லாப்புத்தகங்களும் உட்கரு ஒன்று தான் எனவே உள்நாட்டு ,வெளிநாட்டு ஆசிரியரின் புத்தகம் எனப் பிரித்து பார்க்க வேண்டியதில்லை.
எனவே பாடத்தின் உட்கருவைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், கற்றுத் தெளிந்த பின்னர் மற்ற எந்தப் புத்தகத்தை படித்தாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் ,எனவே உங்களுக்கு எளிதாகப் புரியக்கூடிய ஒரு புத்தகத்தைத் தேர்வு செய்து முழுமையாகப் படியுங்கள் , தினமும் திரும்ப திரும்ப படியுங்கள்.
ஐஐடி மாதிரியான மிக நவீனக் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து அறிவைப் பெருக்கி புகழ் பெற விரும்பும் ஒரு மாணவன் சாலிப்படையாமல் தினசரி 500 பக்கங்கள் படிக்கப் பழகிக்கொள்ள வேண்டும் .
எந்தத் துறை சம்பந்தமான புத்தகத்தைக் கொடுத்தலும் சாலிப்படையாமல் அதைப் படித்து புரிந்துகொள்ள முயற்சி வேண்டும். அதற்கு முதல் பயிற்சி ஒரே இடத்தில் மணிக்கணக்காக உடக்காரந்திருத்தல், ஒரு இடத்தில் உட்கார்ந்து 8 மணிநேரம் செலவிட பயிற்சி பெற்றால் மற்றதெல்லாம் எளிதாகக் கிட்டும்.
இந்தப் பக்கத்தை முழுமையாகப் படித்து, இதில் குறிப்பிடபட்டுள்ள திட்ட வரைவுகளையும், குறிப்புகளையும் செயல்படுத்தி பலன் பெற வாழ்த்துக்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------------------