IEEE கட்டுரையின் வெளியீட்டின் அவசியம்
அவசியம் என்ன?
இதற்குச் சரியான பதில் ஒரு வார்த்தைத் தான் அங்கீகாரம். IEEE என்பது ஒரு அமெரிக்க நிறுவனம் இதன் மூலமாக உலகெங்கும் வியாபித்து இருக்கும் துறைசார் அறிஞர்களிடம் உங்கள் படைப்பு மற்றும் திறனுக்கான ஒப்புதலைப் பெருதலே இந்தக் கட்டுரை வெளியீடு நிகழ்வு, IEEE ஒருங்கிணைக்கும் வருங்கால நிகழ்வுகளை கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி காணலாம்.
யார் ? சமர்பிக்கலாம்
உயற்கல்வியை முடித்துப் பட்டப்படிப்பு படித்துகொண்டிருக்கும் அனைத்து மாணவர்களும் இந்தக் கட்டுரையை தயார்ச் செய்து சமர்பிக்க IEEE அனுமதி அளிக்கிறது . மேலும் பட்டம் முடித்த தற்போது பணியில் இருப்பவரும் சமர்பிக்கலாம்
சமர்பிக்கும் முறை
கட்டுரை முழுவதுமாகத் தொழில்நுட்பம் சார்ந்து மட்டுமே இருக்க வேண்டும்.உதாரணத்திற்கு IEEE journals வெளியீடு ஒன்றை தயார்ச் செய்வதாக வைத்துக்கொள்வோம் . முதலில் ஏற்கனவே சமர்பிக்கப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கட்டுரைகளை மேற்கோள் காட்டி அதைவிட மேம்பட்ட கட்டுரை ஒன்றை அதற்கான டெம்ப்ளேட் வடிவில் தயார்ச் செய்யவேண்டும்.
உங்களுக்குத் தேவையான டெம்ப்ளேடை IEEE இணையதளம் தில் இருக்கும் Template selector உதவியுடன் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.பின்னர் அந்தக் கட்டுரையை துறைச் சார்ந்த பேராசியர்களிடம் சமற்பித்து ஆய்வுக்கு உட்படுத்தி அதில் வரும் தொழில்நுட்ப பிழைகளைச் சரி செய்ய வேண்டும். (நிராகரிக்கவும் வாய்ப்புள்ளது.) பின்னர்
பப்ளிஷர் யார் என்பதைத் தேர்வு செய்யவேண்டும், பப்ளிஷர் உங்கள் கட்டுரையை அடிப்படை எழுத்துபிழைக்கள் மற்றும் இலக்கண பிழைகளைச் சரிபார்த்து அதனைத் துறைசார்ந்த அறிஞர்களிடம் சமார்பிப்பார். அதன் நம்பகத்தன்மையைப் பரிசோதித்த பின்னர் அதனை IEEE தளத்தில் வெளியிட்டு துறைச் சார்ந்த வல்லுநர்கள், கல்வி நிறுவனங்கள் அனைவரும் பார்க்கும் படி செய்வார் , மேலும் நீங்கள் வெளியிட்ட இந்தக் கட்டுரைக்காக உங்களுக்கு ஒரு பிரத்தியேக (digital object identifier) ID ஒன்று கொடுக்கப்படும்.
வெளியிடப்பட்ட அந்தக் கட்டுரையை பார்த்த யார் வேண்டுமானாலும் உங்கள் கட்டுரையை அடிப்படையாக வைத்து அதில் சில மேம்படுகளைச் செய்து வேறு ஒரு கட்டுரையை சமர்பிக்க முடியும். அப்படிச் செய்யப்படும் கட்டுரைகளின் copyright நிர்வகிப்பது மற்றும் மறுபதிப்பு செய்வதைத் தடுப்பது பப்ளிஷர்களின் பொருப்பு.
இதே போல் IEEE conference வெளியீட்டிற்கு முதல் முறை வெளியிடப்படும் கட்டுரைக் களுக்கு மட்டுமே அனுமதி உண்டு , ஏற்கனவே வெளியிடப்பட்ட கட்டுரைகளை மேம்பாடுகள் செய்ய முடியாது.
இந்தச் செயல்முறைக்கு தளமாக இருப்பது IEEE எனும் நிறுவனம்.
செலவு எவ்வளவு ?
conference வெளியீட்டிற்கு கட்டுரைச் சமர்பிக்க இலவசம் , ஏற்றுக்கொள்ளபட்ட பிறகு வெளியிட ரூ 15000 ( ஏறத்தாழ) வரை ஆகும்.
journals வெளியீட்டிற்கும் கட்டுரைச் சமர்பிக்க இலவசம் , வெளியீடுவாதற்க்கு ,
IEEE (closed access ) பப்ளிஷ் செய்ய இலவசம் ,கட்டுரை வேண்டியவர்கள் பணம் செலுத்தி படிப்பார்கள். மெம்பர்ஷிப் இருந்தாலும் பணம் செலுத்தி படிக்க வேண்டும்.
IEEE (open access ) பப்ளிஷ் செய்ய - 1850 டாலர் ஆகும் - மெம்பர்ஷிப் உள்ளவர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்
ஆகும் காலம் எவ்வளவு ?
இதனை இரண்டு விதமாக எடுத்துக்கொள்ளாம் conference மற்றும் journals கட்டுரையைத் தொடங்கி , ஒப்புதல் பெற்று ,திருத்தம் செய்து மீண்டும் conference களில் சமர்பிக்கக் குறைந்தது ஆறுமாத காலம் ஆகும். இதுவே journals என்றால் சமர்பிக்கக் குறைந்தது ஒருவருட காலம் ஆகும்.
குறிப்பு : 6 மற்றும் 12 மாதங்கள் என்பது குறைந்த பட்சக் கால அளவு
அதிகமாகக் கட்டுரை வெளியிடுவது யார் ?
உலகத்தில் அதிகமாக IEEE கட்டுரைகளை வெளியிடுவது அமெரிக்கா இரண்டாவது இடத்தில் வேகமாக வளர்ந்துவரும் சீனா இருக்கிறது பின்னர் ஜப்பான் , தென்கொரியா, இந்தியா நாடுகள் அடுத்தடுத்து இருக்கிறது.
membership அவசியமா ?
இந்தத் தளதில் வெளியாகும் பத்திரிக்கைகள் உங்களுக்கு வேண்டும் என்றால் mebership அவசியம் , மேலும் இந்தக் கட்டுரைகளை படித்து புரிந்து கொள்ளும் அளவிற்கு உங்களுக்கு உங்கள் துறையில் அனுபவம் இருக்கவேண்டும். கட்டுரை வெளியிடும் திட்டம் இருப்பவர்கள்மற்றும் துறையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள் தாராளமாக மெம்பர்ஷிப் வாங்கிக்கொள்ளலாம். கட்டுரை வெளியிடும் நபர்களுக்கு மெம்பர்ஷிப் மூலம் சலுகைகள் உண்டு மாணவர்களுக்கு வருடத்திற்கு 14.25 டாலர் ஆகும். இதனை இந்தியா ரூபாயில் செலுத்தி வாங்க முடியாது , கிரிடிட் கார்டு (Visa,mastercard) மூலம் மட்டுமே வாங்க முடியும் மேலும் தகவல்களுக்கு click link
IEEE யின் நோக்கம்
IEEE அமைப்பின் நோக்கம் அவர்களது நோக்கம் துறைசார்ந்த அறிவை மேம்படுத்துவதும், மேலும் அதனை அனைவருக்கும் கிடைக்கப்பெற செய்வதும்.
More links
"Graphic scientific calculator" Mobile App.
ஆழ்ந்த படிப்பு, பழக்கங்கள், முறைகள்
